ஸ்ரீ மஹா சோளியம்மன் திருக்கோவில்

இந்து கொங்கு வெள்ளாள கவுண்டர்-ஆத்தூர் காடை மற்றும் விளையன் குலத்தார்களின் தனிக்கோவில்

எதிர்வரும் விழாக்கள் படத்தொகுப்புகள் நிர்வாகக் குழுவினர் நன்கொடை செலுத்த நேரலை (LIVE)

ஸ்ரீ சக்கரம்

Cover Story Image

ஸ்ரீ சக்கரம்

ஸ்ரீ சக்கரம் அமைந்த ஆலயங்கள் மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீசக்கரம். முற்காலத்திலிருந்தே ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயில்களில் மக்கள் ஈர்ப்புத் தன்மை ஏற்பட்டு புகழ்பெற்றிருப்பதைக் காண முடிகிறது. அம்பிகையானவளின் உக்கிரத்தைத் தணிக்க சர்வேஸ்வரன் அந்த உக்கிரக்கலையையே ஸ்ரீசக்கரமாக ஸ்தாபித்து ஆகர்ஷித்து அம்பிகைக்கு எதிரில் வைத்து சாந்தமடையச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. பூர்வ புண்ணியச் சேர்க்கை இருந்தால்தான் கலியுகத்தில் சக்தியை வழிபட்டு மேன்மைக்கு வரமுடியும் என்று ஆதிசங்கரர் தன் சௌந்தர்ய லஹரியில் குறிப்பிட்டுள்ளார். ஒன்பது கட்டுகள் கொண்ட அமைப்புதான் அம்பாளின் எந்திரமான ஸ்ரீசக்கரம். நம் பார்வைக்கு சாதாரணக் கோடுகளும் முக்கோணங்களுமாகத் தெரியும் ஸ்ரீசக்கரம் அம்பிகையின் இருப்பிடம் மட்டுமல்ல, சர்வசக்தியும் இதில் அடக்கம். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய

Article Image 1

சக்தி வழிபாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் ஸ்ரீ சக்கர வழிபாடானது, நமது நாட்டின் பல இடங்களில் பிரபலமாக இருந்து வருகிறது. காமாட்சி, துர்க்கை, ராஜராஜேஸ்வரி, லலிதாம்பிகை போன்ற தெய்வங்களுக்கு ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்வதும், அதை தனிப்பட்ட முறையில் வழிபாடு செய்வதும் வழக்கத்தில் இருந்து வருகிறது. சக்தி வாய்ந்த ஸ்ரீ சக்கர வழிபாட்டை தகுந்த முறைப்படி உபதேசம் பெற்று, உரிய நியமங் களுடன் வழிபட்டு வந்தால், பல நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஆன்றோர்களுடைய நம்பிக்கையாகும். ஆதிசங்கரர் பல்வேறு சாக்த தலங்களுக்கு சென்று, அங்கு உக்கிரமாக இருந்த அம்பிகைகளின் மூல ஸ்வரூபங்களுக்கு முன்னர் அல்லது அந்த கோவில்களின் உட்புறத்தில் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்து, அந்த தெய்வ மூர்த்தங்களை சாந்த சொரூபிணியாக மாற்றியுள்ளார். பிரபலமான காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலும், அவரால் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. ஒற்றைக்காலில் நின்றபடி அம்பிகை தவம் செய்யும் மாங்காடு தலத்திலும் அர்த்த மேரு அமைப்பில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல கோவில்களில் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்யப்ப

Article Image 2

சகல சக்தி தரும் ஸ்ரீ சக்ர வழிபாடு… சக்தி வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது, ஸ்ரீ சக்கர வழிபாடு. ஆதிசங்கரர், உக்கிரமாக இருந்த அம்பிகைகளின் மூல ஸ்வரூபங்களுக்கு முன்பு, ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து, அம்பிகையின் உக்கிரத்தை குறைத்து, சாந்த ஸ்வரூபமாக அம்பிகையாக மாற்றியிருக்கிறார். ஸ்ரீ சக்கரம் வைத்து வழிபடும் இடங்களில், லஷ்மி குடியிருப்பாள் என்பது ஐதீகம். இந்த ஸ்ரீ சக்கர வழிபாடு, சக்தி வழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீ சக்கரம். லிங்கபுராணத்தில், புஷ்ப தந்தர் என்பவர், மேருமலையில் இந்த ஸ்ரீ சக்கர வழிபாட்டை, வரை கலையாக வரைந்து, அதற்கு பிள்ளையார் வடிவம் கொடுத்ததாகவும்; ஆதிசங்கரரின் குரு கெளடபாதர்தான் அதை உணர்ந்து, அவருக்கு உபதேசித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.