எதிர்வரும் விழாக்கள் படத்தொகுப்புகள் நிர்வாகக் குழுவினர் நன்கொடை செலுத்த நேரலை (LIVE)
சித்திரா பௌர்ணமி
சித்திரா பௌர்ணமி : சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி கண்ணனுக்கு உகந்த பௌர்ணமி ஆகும். அதனையே நாம் சித்திரா பௌர்ணமி என்று அழைக்கிறோம். இவ்வாறு ஆண்டுக்கு ஒரு முறை வரும் இந்த சித்திரா பௌர்ணமி அன்று கண்ணன் வசந்தமாக தனது வசந்தகாலத்தில் இருப்பார் என்று பகவத்கீதை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சித்திரா பௌர்ணமி உருவானதன் காரணம் ஒரு சமயம் பார்வதி தேவி தனது ஓய்வு நேரத்தில் ஒரு சித்திரம் ஒன்றை வரைந்தார். அந்த சித்திரம் அவருக்கு மிகவும் பிடித்து போக அந்த சித்திரதிற்கு உயிர் கொடுக்குமாறு தனது துணைவனான சிவபெருமானிடம் கோரிக்கை ஒன்றினை வைத்தார். அந்த கோரிக்கையினை ஏற்ற சிவபெருமான் அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். அந்த சித்திரம் உயிர் பெற்ற நாளே சித்திரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது என்று புராணங்களில் ஒரு குறிப்புண்டு. இந்த சித்திரா பௌர்ணமிக்கு மற்றொரு பெயர்காரணமும் உள்ளது. அது யாதெனில், சித்திர மாத பௌர்ணமி அன்று நீர் நிலைகளில் நிலவின் முழுவடிவமும் பிரகாசமாக தெரியும் என்பதனால் அது சித்திரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது என்ற ஒரு கருத்தும் உள்ளது
சித்திரா பௌர்ணமியின் பலன்கள் : சித்திரை மாதம் ஏற்படும் பௌர்ணமி அன்று சந்திர பகவான் பூமிக்கு மிக அருகில் தனது முழுபிரகாசத்துடன் காட்சியளிப்பதால் அன்று நாம் சந்திர பகவானை வேண்டினால் நாம் வேண்டிய வரம் நமக்கு நிச்சயம் கிடைக்கும். மேலும் அந்த வழிபாடுகள் மூலம் நமக்கு நிறைய பலன்கள் கிடைக்கும் என்ற ஐதீகம் உண்டு. மேலும் சித்திரா பௌர்ணமி ஏற்படும் நாள் அன்று சூரிய பகவான் தனது முழுசக்தியுடன் பலம் பெற்று நிற்பார். அன்று சந்திரனும் சூரியனும் துலாம் ராசியின் ராசியான செவ்வாய் நட்சத்திரமான சித்திரையில் சமபலத்துடம் ஒருவரை ஒருவர் துணை நின்று சமபலத்துடம் அந்த இடத்தினை பகிர்வார்கள் என்றும் கூறப்படுகிறது. பௌர்ணமி விரதம் : பௌர்ணமி அன்று அதிகாலை எழுந்து குளித்து வீட்டின் வாயிலில் மாவுக்கோலம் இட்டு பூஜை செய்வது சிறந்த பலனை தரும். மேலும் தெற்கு பக்கம் பார்த்தவாறு அமைந்த பூஜை அறைகளில் மாவுக்கோலம் இட்டு அந்த மாவுக்கோலம் சித்ரகுப்தர் போன்று இருந்தால் அது மேலும் பூஜைக்கு பலம் சேர்க்கும். இவ்வாறு சித்திரகுப்தன் வடிவ கோலம் போட்டு நாம் நடத்தும் பூஜையின் பலனாக நமது பாவங்கள் அனைத்தும் நீங்கி நமக்கு புண்ணியம
சித்திரகுப்தர் பிறப்பு : ஏழு வண்ணங்கள் இணைந்து பிறந்தவளான நீனாதேவிக்கு பிறந்ததால் சித்திரகுப்தருக்கு ஏழு வண்ண நிறத்தினால் ஆன வஸ்திரத்தினை சாற்றுவது வழக்கம். மேலும் அவரின் வருகைக்கு சான்றாக தேங்காய் சாதம், தயிர் சாதம் மற்றும் உளுந்து வடை போன்றவற்றினை நெய்வேத்தியம் செய்வது சிறப்பம்சமாகும். சித்திரகுப்தர் பெயர் வரலாறு : சிவா பெருமான் சிவலோகத்தில் சித்ரகுப்தருக்கு அளித்த பதவி யாதெனில் மக்கள் மற்றும் தேவர்கள் ஆகியோர் செய்யும் புண்ணியங்களை குறித்து வைப்பது. “சித்” என்றால் மனம் “குப்த” என்றால் மறைவு அதாவது மனதில் புண்ணியகாரியத்தினை மறைத்து வைத்து நாம் செய்யும் செயலினை குறித்து வைப்பவர் சித்ரகுப்தர் என்று அவரின் பெயர் வரலாறு நமக்கு தெளிவுபடுத்துகிறது. எமனின் உதவியாளர் : தனது வேலைப்பளு மிகுதியின் காரணமாக எமன் சிவபெருமானிடம் வேண்டியதாகவும் அதனால், சிவன் அவர் கோரிக்கையினை ஏற்று அவருக்கு உதவியாளராக யாரை நியமிக்கலாம் என்று கற்பனை கொண்ட போது அவரின் நினைவில் பட்டவர் தான் எழுதுகோளுடன் பிறந்த இந்த சித்ரகுப்தர். எனவே அவரை சிவன் எமனின் வேலைப்பளுவினை குறைக்க அவருக்கு சித்ரகுப்தரை உதவியாளராக நியம