ஸ்ரீ மஹா சோளியம்மன் திருக்கோவில்

இந்து கொங்கு வெள்ளாள கவுண்டர்-ஆத்தூர் காடை மற்றும் விளையன் குலத்தார்களின் தனிக்கோவில்

எதிர்வரும் விழாக்கள் படத்தொகுப்புகள் நிர்வாகக் குழுவினர் நன்கொடை செலுத்த நேரலை (LIVE)

எழுதிங்கள்சீர்

Cover Story Image

எழுதிங்கள்சீர் - மல்லிகா தண்டபாணி K779

கொங்கு வெள்ளாளர் இனத்தில், பெண்ணிற்குப் பெண்பிள்ளை பிறந்து, அந்த குழந்தை பெரியவளாகி ருதுவான பின் அப்பெண்ணிற்கு அவள் தகப்பன்-தாய் வீட்டீல் செய்யும் சீர்தான் எழுதிங்கள்சீர். கொங்கு வெள்ளாளர் இனத்தில் இது ஒரு திருமண நிகழ்ச்சி போல் நடைபெரும். திருமணம் போல அனைத்து சொந்தகாரர்களையும் நேரில் சென்று அழைப்பர். குறித்த நல்ல நாளில் மாலை நல்ல நேரத்தில் உறவினர்சூழ அருமைக்காரர் முகூர்த்தகால் நடுவார். பின்வரும் சடங்குகள் எழுதிங்கள்சீர் பாட்டாக…

Article Image 1

கற்பு குலையாத காராள வம்சம் வேற்பு குலையாத வேளாளர் வம்சம் காப்பு குலையாத கவுண்டர்கள் வம்சம் காராள குலதிலகர் கவுண்டர்கள் வம்சம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் வம்சம் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேறூன்றி பட்டி மரவு எலந்த மரம் குடை மரவு நுகம் கொலுவு குழவி லிங்கம் உரல் லிங்கம் அம்மி நிறைக்குடம் புடைச்சட்டி வாணைச்சட்டி பிறந்தான் பிறந்த மணைக்கு எழுதிங்கள்சீர் செய்ய பிறந்தாளை ஊரிலிருந்து அழைத்துவர புது துணி எடுத்து விரத விருந்து வைத்து வெள்ளைமாத்தில் எழுகுடம் வைக்க எழுதிங்கள்காரிகள் அருமைக்காரருடன் ஏழு கிணற்றிலிருந்து சீர்தண்ணீர் கொண்டு வந்து வெள்ளைமாத்தில் வைத்து, கங்கணம் கட்டி, மூன்று முறை அரிசி போட்டு கணபதி பூசை செய்து உரல், நுகம் அம்மி குழவி புடைச்சட்டி வாணைச்சட்டி பூசை செய்து பாலக்கால் வெட்டி வந்து முகூர்த்தகால் நட்டு வாசல் தொளித்து வண்ண கோலமிட்டு செம்மண் சுண்ணாம்பினால் சீராக கரைகட்டி எழுதிங்கள்காரிக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து ஐந்துபடி திணை மாவில் நீர்விட்டு நன்றாகப் பிசைந்து, இருகூராக்கி, இடையில்

Article Image 2

எழுதிங்கள் சீருக்காகும் செலவுகள் அனைத்தும் தாய் வீட்டாரே செய்வர். சீர்காரியின் சகோதரன் பணமுடுப்பு, நகை மற்றும் சீர்குடையில் அரிசி, வெல்லம், தேங்காய், பழம், வெற்றலை, பாக்கு, பட்டுபுடவை வைத்து பிறந்தான் ஏடுத்துவர ஊர்பிள்ளையரை வணங்கி சீருடன் கணவன் வீடு செல்வாள். கொங்குவேள்ளாளர்களில் எழுதிகம் செய்துகொண்ட பெண்கள்தான் சுபகாரிங்களில் முன் நிற்பார்கள். அப்பெண் அருமைகாரருடன் நல்லகாரியாங்களில் சீர்-சடங்கு செய்யும் தகுதியை பெறுகிறாள். இதனால் அவள் முழுச்சுமங்கலியாகிறாள்.