ஸ்ரீ மஹா சோளியம்மன் திருக்கோவில்

இந்து கொங்கு வெள்ளாள கவுண்டர்-ஆத்தூர் காடை மற்றும் விளையன் குலத்தார்களின் தனிக்கோவில்

எதிர்வரும் விழாக்கள் படத்தொகுப்புகள் நிர்வாகக் குழுவினர் நன்கொடை செலுத்த நேரலை (LIVE)

SHREE MAHA SOLIAMMAN TEMPLE

எழுதிங்கள்சீர்

கொங்கு வெள்ளாளர் இனத்தில், பெண்ணிற்குப் பெண்பிள்ளை பிறந்து, அந்த குழந்தை பெரியவளாகி ருதுவான பின் அப்பெண்ணிற்கு அவள் தகப்பன்-தாய் வீட்டீல் செய்யும் சீர்தான் எழுதிங்கள்சீர். கொங்கு வெள்ளாளர் இனத்தில் இது ஒரு திருமண நிகழ்ச்சி போல் நடைபெரும். திருமணம் போல அனைத்து சொந்தகாரர்களையும் நேரில் சென்று அழைப்பர். குறித்த நல்ல நாளில் மாலை நல்ல நேரத்தில் உறவினர்சூழ அருமைக்காரர் முகூர்த்தகால் நடுவார். பின்வரும் சடங்குகள் எழுதிங்கள்சீர் பாட்டாக…

Read more
image01

சித்திரா பௌர்ணமி

சித்திரா பௌர்ணமி : சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி கண்ணனுக்கு உகந்த பௌர்ணமி ஆகும். அதனையே நாம் சித்திரா பௌர்ணமி என்று அழைக்கிறோம். இவ்வாறு ஆண்டுக்கு ஒரு முறை வரும் இந்த சித்திரா பௌர்ணமி அன்று கண்ணன் வசந்தமாக தனது வசந்தகாலத்தில் இருப்பார் என்று பகவத்கீதை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சித்திரா பௌர்ணமி உருவானதன் காரணம் ஒரு சமயம் பார்வதி தேவி தனது ஓய்வு நேரத்தில் ஒரு சித்திரம் ஒன்றை வரைந்தார். அந்த சித்திரம் அவருக்கு மிகவும் பிடித்து போக அந்த சித்திரதிற்கு உயிர் கொடுக்குமாறு தனது துணைவனான சிவபெருமானிடம் கோரிக்கை ஒன்றினை வைத்தார். அந்த கோரிக்கையினை ஏற்ற சிவபெருமான் அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். அந்த சித்திரம் உயிர் பெற்ற நாளே சித்திரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது என்று புராணங்களில் ஒரு குறிப்புண்டு. இந்த சித்திரா பௌர்ணமிக்கு மற்றொரு பெயர்காரணமும் உள்ளது. அது யாதெனில், சித்திர மாத பௌர்ணமி அன்று நீர் நிலைகளில் நிலவின் முழுவடிவமும் பிரகாசமாக தெரியும் என்பதனால் அது சித்திரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது என்ற ஒரு கருத்தும் உள்ளது

Read more
image01

ஸ்ரீ சக்கரம்

ஸ்ரீ சக்கரம் அமைந்த ஆலயங்கள் மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீசக்கரம். முற்காலத்திலிருந்தே ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயில்களில் மக்கள் ஈர்ப்புத் தன்மை ஏற்பட்டு புகழ்பெற்றிருப்பதைக் காண முடிகிறது. அம்பிகையானவளின் உக்கிரத்தைத் தணிக்க சர்வேஸ்வரன் அந்த உக்கிரக்கலையையே ஸ்ரீசக்கரமாக ஸ்தாபித்து ஆகர்ஷித்து அம்பிகைக்கு எதிரில் வைத்து சாந்தமடையச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. பூர்வ புண்ணியச் சேர்க்கை இருந்தால்தான் கலியுகத்தில் சக்தியை வழிபட்டு மேன்மைக்கு வரமுடியும் என்று ஆதிசங்கரர் தன் சௌந்தர்ய லஹரியில் குறிப்பிட்டுள்ளார். ஒன்பது கட்டுகள் கொண்ட அமைப்புதான் அம்பாளின் எந்திரமான ஸ்ரீசக்கரம். நம் பார்வைக்கு சாதாரணக் கோடுகளும் முக்கோணங்களுமாகத் தெரியும் ஸ்ரீசக்கரம் அம்பிகையின் இருப்பிடம் மட்டுமல்ல, சர்வசக்தியும் இதில் அடக்கம். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய

Read more
image01

சேமிப்பு அவசியம்

ஆஸ்திரேலியா அருகே உள்ள குட்டி தீவு நவ்ரு (Nauru). ஜனத்தொகை 10,000 மட்டுமே. தீவின் நீளம் ஐந்து கிமீ, அகலம் மூன்று கிமீ. 30 நிமிடத்தில் சுற்றிவரக்கூடிய நாடு! மீன்பிடித்தல், விவசாயம் என மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நாட்டுக்கு சனியன் பிடித்தது.. ஆம்... தீவில் லட்சக்கணக்கான ஆண்டுகளாக பறவைகள் எச்சமிட்டு எச்சமிட்டு அவை முழுக்க பாஸ்பேட் (Phosphate) எனும் கனிமத் தாதுப் பொருளாக மாறியிருந்தன. பாஸ்பேட் சர்வதேச சந்தையில் ஏராளமான விலைக்கு போகும் பொருள். தீவில் கணக்கு, வழக்கற்ற அளவில் பாஸ்பேட் இருந்தது. அதன்பின் பன்னாட்டு கம்பனிகள் வந்து இறங்கின. பாஸ்பேட்டை வெட்டி எடுத்தன. அரசுக்கு ஏராளமான வருமானம் வந்தது. ஒரு கட்டத்தில் 10,000 பேர் மட்டுமே உள்ள நாட்டின் அரசிடம் 170 கோடி டாலர்கள் இருந்தன. கணக்கு போட்டால் நபர் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் டாலர். அதாவது நால்வர் அடங்கிய குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய்களை அரசால் கொடுத்திருக்க முடியும். ஆனால், அந்த பணத்தை என்ன செய்தார்கள்? எல்லாருக்கும் இலவசமாக உணவு, டிவி, எலெக்ட்ரானிக்ஸ் என வாங்கி கொடுத்தார்கள். அரசின் சார்பில் விமான கம்பனிகளை துவக்கினார்கள். ஹவாயி,

Read more
image01

மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது ஐதீகம். அத்தகைய சிறப்பு வாய்ந்த மகா சிவராத்திரியின் வரலாற்றைக் குறித்து இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்! பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள்.

Read more
image01

எதிர்வரும் விழாக்கள்

 
 

சித்திரை கனி அலங்கரம்-14-04-2026 காலை 6.30 மணிக்கு பூஜை

சித்திரை காலை 6.30 மணிக்கு பூஜை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்

-

 
 
 

சித்திரை அமாவாசை -17-04-2026 மதியம் 12 மணிக்கு பூஜை நடைபெரும்

சித்திரை மதியம் 12க்கு பூஜை மற்றும் காலை முதல் மதியம் 2 மணி வரை அன்னதானமும் நடைபெறும்

-

 
 
 

திருதேர் விழா காப்பு கட்டு வைபவம்-29-04-2026 இரவு 10 மணிக்கு

இரவு திருதேர் விழா காப்பு கட்டு வைபவம்

-

 
 
 

திருதேர் விழா தர்மகர்த்தா மண்டகப்படி பூஜைகள் -30-04-2026 இரவு 8 மணிக்கு

திருதேர் விழா தர்மகர்த்தா மண்டகப்படி பூஜைகள் இரவு 8 மணிக்கு

-

 
 
 

திருதேர் விழா முப்பாடு மண்டகப்படி பூஜைகள் -01-05-2026 இரவு 8 மணிக்கு

திருதேர் விழா முப்பாடு மண்டகப்படி பூஜைகள் இரவு 8 மணிக்கு

-

 

உறுப்பினர்கள் கவனத்திற்கு

ஸ்ரீ சோளிஸ்வரர் திருக்கோவிலில் மண்டல பூஜையும் பங்குனி (உத்திரம்) பௌர்ணமி 01.04.2026

நாளை மறுநாள் புதன்கிழமை 01.04.2026 மாலை 6 மணிக்கு நமது காடை குல மற்றும் விளையன் குல குடிப்பாட்டுமக்கள் சார்பாக ஆத்தூர், நத்தமேடு, ஸ்ரீ சோளிஸ்வரர் திருக்கோவிலில் மண்டல பூஜையும் அதைத் தொடர்ந்து மாலை 7 மணி அளவில் நமது மஹா சோளியம்மன் திருக்கோவிலில் பங்குனி பௌர்ணமி பூஜைகளும் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்படும்.

அனைவரும் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்